நாளை நீர்வெட்டு!!

 


கண்டி மாநகர சபையின் நீர் சுத்திகரிப்பு திட்டத்தில் திருத்தவேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை (27) மு.ப. 6 மணி எதிர்வரும் 28ஆம் திகதி  புதன்கிழமை நண்பகல் 12 மணி வரை நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.


தென்னம்கும்புர, வகல தென்னம்கும்புர, இலுக்மோதர, தேக்கவத்த, குருதெனிய, குட்ஹோப், அம்பிட்டிய, தலாத்து ஓயா, வீக்கணுவ, தம்பவெல, கட்டவெல மற்றும் லேவெல ஆகிய பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும். இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 


இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.