பளு தூக்கும் போட்டியில் வவுனியா மாணவர்கள் சாதனை!!

 


 


மாகாண மட்டப்  பளு தூக்கும் போட்டியில் வவுனியா - நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் பதக்கங்களை வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.  யாழ்ப்பாணம் - கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலையில் இடம்பெற்றுள்ள பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியிலேயே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். 


17க்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 49 kg எடை பிரிவில் நா. நகிந்தன், 82kg தூக்கி தங்கமும் ஜொ. ஜதுர்சன் 55kg எடை பிரிவில் 97kg தூக்கி வெள்ளி பதக்கமும் கி. சுபிஸ்கரன் 59kg எடை பிரிவில் 100kg தூக்கி வெள்ளி பதக்கமும் யோ. சாருஜன் 55kg எடை பிரிவில் 80kg தூக்கி 5ஆம் இடமும் 20வயதுக்குட்படட ஆண்கள் பிரிவில் அ. கோகுலன் 65kg எடை பிரிவில் 125kg பழுவை தூக்கி சாதனை படைத்துள்ளனர்.


இந்நிலையில் தங்கப் பதக்கம் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவரகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.