இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

 


இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் 6.1 என்ற ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் குறித்த நிலநடுக்கத்தால் மத்திய இந்தோனேசியா முழுவதும் பாரிய அதிர்வலைகள் உணரப்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


தீவுக்கூட்டங்கள் நிறைந்த இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று என்றாலும் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.