சீரான வானிலை நிலவும்!!

 இன்று (12) நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 20-35 கிலோமீற்றராக காணப்படும் எனவும் மன்னாரிலிருந்து புத்தளம் வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் 


மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சற்று கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.