”பஸ் கட்டணத்தை குறைப்பதற்கான வாய்ப்பில்லை”

 


டீசல் விலை குறைக்கப்பட்டாலும், பஸ் கட்டணத்தை குறைப்பதற்கான வாய்ப்பில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமாயின், டீசலின் விலை 04 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

நேற்று(02) நள்ளிரவு முதல் ஒரு லீட்டர் லங்கா ஒட்டோ டீசல் 15 ரூபாவாலும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய,  ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 405 ரூபாவாகவும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் புதிய விலை 355 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.