கனேடிய பிரதமரின் சம்பளம்!!

 


கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா என அந்நாட்டு மக்களிடம் ஓர் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பலரும் பிரதமரின் சம்பளத் தொகை எவ்வளவு என்பது பற்றி அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் சம்பளம் பற்றி சரியான அல்லது ஓரளவு அந்நலவான தகவல்களை 18 விதமானவர்கள் மட்டுமே வெளிப்படுத்தி இருந்தனர்.

மூன்று லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான டாலர்களை வருடாந்தம் சம்பளமாக பெறுகின்றார் என 18 வீதமானவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

உண்மையில் பிரதமர் டுடே இந்த ஆண்டு சம்பளத்தொகை 379000 டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 42 விதமானவர்கள் பிரதமரின் சம்பளம் 3 லட்சத்தை விடவும் குறைவானது என தெரிவித்திருந்தனர்.


24 விதமானவர்கள் நான்கு லட்சம் டொலர்களை விட அதிகம் என குறிப்பிட்டு இருந்தனர்.

சுமார் 9 விதமானவர்கள் ஐந்து லட்சம் டாலர்களை விடவும் அதிகமான ஆண்டு சம்பளத்தை பெறுகிறார் என குறிப்பிட்டு இருந்தனர்.

மானிட்டோபா மற்றும் சஸ்கெச்வான் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பிரதமரின் சம்பளத்தொகை அதிகம் என கருத்தை வெளியிட்டுள்ளனர்.

இணைய வழியில் இந்த கருத்துக்கணிப்பு நடாத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.