தமிழினத்தின் தாய் அன்னை பூபதி..!


 தியாக தீபத்தை இந்தியா சாகவிட்டதுபோலவே தன்னையும் இந்தியா சாகவிடும் என்பது அன்னை பூபதிக்கு தெரிந்தேயிருந்தது..


தியாக தீபத்தின் அறப்போர் தந்த எழுச்சியே உலகின் பெருவல்லரசான இந்தியாவுடன் மோதும் துணிவை தமிழர்களிற்கு தந்தது.


அதுபோலவே  யார் வந்தாலும், எந்தக்கொம்பன் வந்தாலும் அவன் எமை அடக்கமுனைந்தால் அடங்கிப்போகாது எதிர்த்து போரிடவேண்டும் என்பதை அன்னை பூபதி என்னும் அந்தத்தமிழ்த்தாய் அன்று தன் தியாகமரணம் ஊடாக எமக்கு கற்றுத்தந்தார்.


தன் குடும்பத்துடன், தன் கணவனுடன் இறுதிவரை இனிதாக வாழும் வாய்ப்பும் அவருக்கிருந்தது.

ஆனாலும் அதையெல்லாம் விட இனத்தின் வலி அவரை வருத்தியது.


இந்தியா வல்லாதிக்கப்பேய்களின் முகத்தில் தன் தியாகச்சாவினூடு ஓங்கி அறைந்தார் அந்தத்தாய்..

தமிழினத்தின் தாய் அன்னை பூபதி..


பெண் கடவுள்களை ஆரத்தழுவும் தமிழினம் அந்தத்தாயினை அதைவிட மேலாக என்றும் அரவணைக்கும்..

- அன்பரசன் நடராசா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.