காடு வயல் காக்கனும் தம்பி!


 மனதைக் கொஞ்சம் மாத்து தம்பி

மண்வெட்டியை தூக்கு தம்பி


எருது மாடு வளர்க்கனும் தம்பி

என்றும் அது உதவும் தம்பி


கனவைக் கொஞ்சம்

மாற்று தம்பி

கலப்பையை மறுபடி

தூக்கனும் தம்பி


பழச நினச்சு பாரு தம்பி

பாரம்பரியத்த பழகு தம்பி


உணவைக் கொஞ்சம்

மாத்து தம்பி-உள்ளூர்

உற்பத்தியை பெருக்கனும் தம்பி


உளுந்து பயறு

விதைகனும் தம்பி

விழுந்து கிடப்பவனுக்கு

உதவனும் தம்பி


ஒன்றுபட்டு வாழனும் தம்பி

ஒற்றுமையாய்

உழைக்கனும் தம்பி


செலவைக் கொஞ்சம்

குறைக்கனும் தம்பி

சிக்கனத்தை

கடைப்பிடிக்கனும் தம்பி


வயல் வரம்பை 

திருத்தனும் தம்பி

வசதி வாழ்க்கையை

மறக்கனும் தம்பி


அயலையும் கொஞ்சம்

மதிக்கனும் தம்பி

ஆபத்துக்கு உதவனும் தம்பி


மரம் செடிகள் வளர்க்கனும் தம்பி 

மண்ணை வளமாக்கனும் தம்பி


ஆடு மாடு வளர்க்கனும் தம்பி

பாடுபட்டு உழைக்கனும் தம்பி


கரண்டு நிற்கும்

கவனம் தம்பி 

கை விளக்கிலும்

படிக்கனும் தம்பி


எரிவாயும் தீரலாம் தம்பி 

எல்லோரும் மரம் நடுவோம் தம்பி


பெற்றோல் டீசல்

பிரச்சனை தம்பி-கல்வி

கற்றால் எங்கும்

வாழலாம் தம்பி


காடு வயல் காக்கனும் தம்பி

நாடு நம்ம நாடு தம்பி.


கொள்ளை அடிப்பார்

கவனம் தம்பி

கொள்கை நன்றாய்

வகுக்கனும் தம்பி


நாட்டை நல்லவர்

ஆளனும் தம்பி

நரிகள் ஆண்டால்

பால்படும் தம்பி


வாக்கு நம்ம ஆயுதம் தம்பி

வரும் காலத்தை மாற்றனும் 

இன்றே நல்லா சிந்தி..........


த.யாளன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.