மனைவியை கடத்திய கணவன்!


குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த திருமணமான இளம் பெண் ஒருவரை பலரது உதவியுடன் அவரது கணவர் கடத்திச் சென்றுள்ளார்.


அண்மையில் கணவனை விட்டு பிரிந்த குறித்த பெண் (வயது 18) சிலாபம், மனுவங்கமவில் அமைந்துள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணிருந்த வீட்டிற்கு சென்ற அவரது கணவர் மற்றும் ஐந்து பேர் கொண்ட குழுவினர், பெண்ணை வலுக்கட்டாயமான முறையில் வேனில் தள்ளி கடத்திச் சென்றுள்ளனர்.


இதன்போது கடத்தலை தடுக்க வந்த பெண்ணின் தாயையும் கடத்தல் கும்பல் தாக்கி விட்டு சென்றுள்ளது.


இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணின் தாயார் மாத்திரம் வீட்டிலிருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.*கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.