போதை வியாபாரியின் வீடு முற்றுகை!!

 


புத்தளம் கரம்பை உலுக்காப்பள்ளம் பகுதியில் போதை வியாபாரிகளுக்கும் அப்பகுதி இளைஞர்களுக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் போதை வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருளை விற்பனை செய்யவண்டாமென்று தெரிவித்த இளைஞர்கள் மீது போதை வியாபாரிகள் நேற்று இரவு தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி இளைஞர்களும் போதை வியாபாரிகளைத் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்மக்கள் ஒன்று திரண்டு போதை வியாபாரத்தை நிறுத்துமாறு கோரி கரம்பை உடப்பு சந்தியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டு பேரணியாக சென்று போதை வியாபரியின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவ்விடத்திற்கு நுரைச்சோலைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சிவில் உடையில் வருகைத் தந்திருந்தார்.

இதன்போது அப்பகுதி மக்களுடன் பொலிஸ் அதிகாரி இரண்டு கிழமைகக்குள் போதை வியாபாரத்தை நிறுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

பொலிஸாரின் வாக்குறுதியை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுவிட்டு அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றதாக கூறப்படுகின்றது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.