புத்தாண்டே வருக...!!
இன்னல்கள் நீங்கிட
இடர்கள் களைந்திட
இன்முகம் காட்டியே
இனிய புத்தாண்டே நீ வருக.....
ஆனந்தராகம் இசைத்து
ஆளவிலா இன்பம் கொண்டு
தூய சுடரொளியாய்
தெம்மாங்கு பாடி
புத்தாண்டே நீ வருக...
சித்திரையின் ரத்தினமே
சீர்மிகு சத்தியமே
அற்புதமே ஆரணங்கே
புத்தாண்டே நீ வருக....
வளர்பிறைக் கலசமென
வாழ்த்திசைத்தே வரவேற்று
கூடிநின்று குதூகலிக்க
புத்தாண்டே நீ வருக...
குழந்தையும் குமரியும்
வாலிபரும் பெரியவர்களும்
வாழ்த்திசைத்து வரவேற்க
புத்தாண்டே நீ வருக...
மண்ணுயிர்கள் மகிழ்ந்திருக்க
பூவினங்கள் பூச்சொரிய
மேகச்சாமரங்கள்
மெதுவாக வீசி நிற்க
புத்தாண்டே நீ வருக..
கனத்த மனங்கள்
இழகட்டும்....
இனிதாய் உள்ளம்
சிரிக்கட்டும்....
தீமை கழிய
தீயும் சரிய
வாழ்வு செழிக்க
புத்தாண்டே நீ வருக....
புதிய விடியல் தருக.....
கோபிகை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை