குளத்தில் முதியவரின் சடலம் மீட்பு!!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்து உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் 03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் – புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 50 அகவையுடைய டா.டேவிட் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குளக்கரையில் உயிரிழந்தவரின் மிதிவண்டி மற்றும் செருப்பு, சறம் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த நபரின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகைள புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருவதாககவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை