கொக்குவில் சவுக்கடி கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் சடலமாக மீட்ப்பு!


மட்டக்களப்பு கொக்குவில் சவுக்கடி கடலில் நீராடச் சென்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட மட்டக்களப்பு விபுலானந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இரண்டு மாணவர்களின் சடலங்கள், இன்று (07) காலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.*

*குறித்த மாணவர்கள் இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருந்துள்ளனர். நேற்று மாலை வீட்டிலிருந்து பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்று கடல் நீராடியவேளை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.*

*உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (16வயது), இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன் (16வயது) ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.*

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.