நான்கு ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு!


வடமேற்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.*


*குறித்த ஆளுநர்கள், மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படாமை காரணமாகவே விலக்கப்படவுள்ளனர்.*


*இதன்படி, இந்த தீர்மானம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.*



*இதேவேளை லண்டனில் நேற்று இடம்பெற்ற பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் புதிய ஆளுநர்கள் விரைவில் பெயரிடப்படவுள்ளனர்.*

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.