போதி பூசை மற்றும் பிரித் ஓதப்பட்ட பின்னர் வடமாகாண ஆளுநர்!


தையிட்டி பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமகா விகாரையின புனரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,

 வடக்கின் அரசியல் பிரதிநிதிகளின் தலையீட்டில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் எதிரொலியாக யாழ்.சிவில் சமூக மையம், யாழ்.அம்பேத்கர் இயக்கம் மற்றும் யாழ்.பெண்கள் முன்னணி என்பன இணைந்து இந்த பாதயாத்திரையை ஏற்பாடு செய்திருந்தன. 

  திஸ்ஸ ரஜமஹா விகாரையின் தலைவர் கிந்தோட்டை நந்தராம நாயக்க தேரர் தலைமையில் போதி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டதுடன், விகாரைக்கு ஏராளமான மக்கள் வழிபாடுகளிலும் தானத்திலும் ஈடுபட்டனர்.

 யாழ்ப்பாணத்தில் மத சுதந்திரத்தைப் போற்றும் பெருமளவிலான சாதாரண மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன் இளைஞர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

 இந்த விகாரை தேவானாம்பியதிஸ்ஸ கட்டப்பட்டதாக மஹாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


போதி பூசை மற்றும் பிரித் ஓதப்பட்ட பின்னர் வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் வடக்கில் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும், சுதந்திரத்திற்கு இடையூறு செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறும் மகஜர் கையளிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.