நினைவேந்தலுக்குத் தயாராகின்றது கொடிகாமம் துயிலுமில்லம்! 📸

ஏற்கனவே கட்டப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகள் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அறுத்தெறியப்பட்ட நிலையில் இன்று மீளவும் அவை கட்டப்பட்டுள்ளது.


தமிழர் தாயகத்தை வல்வளைப்புச் செய்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் துயிலுமில்லத்தை இடித்தழித்து முகாம் அமைத்து அங்கு நிலைகொண்டுள்ள நிலையில், துயிலுமில்லத்திற்கு அருகில் கடந்த வருடம் நினைவேந்தல்கள் நடைபெற்ற இடத்தில் இவ்வருடமும் நினைவேந்தல்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 27ம் திகதி மாலை 5.00 மணியளவில் பொதுமக்களை நினைவேந்தல் நடைபெறும் இடத்தில் அணிதிரளுமாறும் ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.