சினித்துளிகள்!!
த்ரிசா எனக்குதான்
மன்சூர் அலிகான் த்ரிசாவ ஏதோ சொல்லிட்டாருனு குறுக்கமறுக்க குதிச்சிட்டிருக்காங்க.. இப்போதெல்லாம் ஒருத்தன் அந்தஸ்தை வைத்துதான் அவன் பேச்சை எடை போடுகிறார்கள்.. இதே விசயத்தை சாருகான் சொல்லியிருந்தா கைதட்டியிருப்பாங்க... மகளிர் சங்கமும் சைலன்டா இருந்திருக்கும்..
லோகேஷ்க்கு செக்
லியோ சறுக்கல்கள், போட்டுக் கொடுத்தல்கள் அரசல் புரசலாக ரஜினி காதுக்கு எட்டியிருக்கின்றது..
லோகேஷ கூப்பிட்டு கறாராக சொல்லிவிட்டாராம்,அடுத்த என்னுடைய படத்தில் அந்த யூனிவேர்ஸ தூக்கி கொஞ்சம் ஓரமா வெச்சிட்டு வா என்று... லோகேஷ் ரொம்ப அப்செட்டாம்...பெரும்புள்ளிகளோட படம் பண்ண போனாலே நம்மள நாமலா இருக்கிற விடுறானுக இல்லை என்று..
எங்கடயள் வேற
அனிருத் Overrated என்பது ஊர் அறிந்த விடயம்,சூப்பர் ஸ்டார் குடும்ப மாபியாக்களால் திரைக்கு கொண்டு வரப்பட்டு தொடர்ச்சியான Recommendationsல் பிழைப்பை ஓட்டி வருகிறார்.. சென்னை தவிர்ந்த தமிழ்நாட்டுல எல்லாரும் உஷாராக இருக்கிறானுக, ஆனா இந்த ஐரோப்பா கனடா ஈழத்து புது தலைமுறைகளுக்கு பாதி தமிழ் பாதி இங்கிலிஷ்ல கத்துறதுதான் செட் ஆகுது போல.
ரஜினி பாபா மந்திரம்
கிரிக்கெட் உலக கிண்ணம் நமக்குதான் என்று ரஜினி சொல்லியிருந்தார்..அவர் வழமையாக எல்லா தனது பட இசைவெளியீடுகளிலும் இந்த படம் சூப்பரா ஓடும்னுதான் சொல்லுவாரு...அதை நம்பியே தயாரிப்பாளர் பின்னர் வீட்டு கதவு வாசல்ல போய் நின்று தகராறு பன்னுவாங்க... நடத்தை கொடுத்து சரி பண்ணிடுவாரு..வீட்டு பொண்ணு வேற படம் எடுக்கணு வந்து நிக்குது..தயாரிப்பாளர் வேற நம்மாளு...
தனிமையை விரும்பும் விஜய்
சினிமாவில் இந்தளவு வெற்றி பெற்றும் மிகவும் சைலன்டாக இருக்கும் விஜய்,உண்மையில் மிகவும் ஒரு தனிமை விரும்பியாம்,எங்கயாச்சு யாருக்கும் சொல்லாம வெளிகிட்டு வெளியூர்ர சாதாரணமாக தங்கி பொழுதை கழித்து வீதியோர கடையில் சாப்பிட்டு விட்டு ஜாலியாக பொழுதை போக்குவாராம்...வீட்டில் கூட ரொம்ப தனிமைபடுத்திகிட்டே இருப்பாராம்...
விஜய்யின் காலை வாரிய ஜோ
ஜோதிகா விஜய்யுடன் நிறைய படங்கள் நடித்துள்ளார். அதுவும் தற்போது வரை குஷி படம் விஜய் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு பொது மேடையில் விஜய்யை காலை வாரி விடும் படி , ஜோதிகா அவர் பெயரை மட்டும் சொல்லவில்லை.
வேண்டுமென்றே ஜோதிகா இப்போது உச்ச நடிகராக இருக்கும் விஜய்யின் பெயரை சொல்லாமல் தவிர்த்து உள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை