உறக்கமற்று போராடியவர்கள்!!
அவர்களை பயங்கரவாதிகள் என்றார்கள்-அவர்கள்
பயங்களை அறியாது
புயங்களை உயர்த்தி நின்றவர்கள்
அவர்களை பாசிசவாதிகள் என்றார்கள்-அவர்கள்
தமிழினத்தை காக்க
பகலிரவு பாராது
பார்போற்ற போராடியர்கள்.
அவர்களை துவேசவாதிகள் என்றார்கள்-அவர்கள்
துயரங்களை தந்தவர்களை
துடைத்தெறியப் போராடினார்கள்
அவர்களை கொலைவெறியர்கள்
என்றார்கள் அவர்கள் எங்களை
கொன்று குவித்தவர்களை கொன்று
கொள்கை காத்தவர்கள்
அவர்களை இரக்கமற்றவர்கள்
என்றார்கள் அவர்கள் இரக்கமற்ற
மனிதப்படுகொலையாளர்களை
எதிர்கொண்டு
உறக்கமற்று போராடியவர்கள்
ஆம் நீங்கள் பல பெயர்கள் வைக்கலாம்
எங்களுக்கு அவர்கள் என்றும்
மானம்காத்த மாவீரர்கள்
மண்ணை நேசித்த
மக்களைக்காத்த மாவீரர்கள்.
தயாளன்
கருத்துகள் இல்லை