கண்ணகி பட விமர்சனம்!!
அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் கண்ணகி. நான்கு விதமாக பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறது இத்திரைப்படம்.ஷான் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் ஆகியோர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஒரு கதாபாத்திரமான அம்மு அபிராமிக்கு நீண்ட நாட்களாகவே திருமணம் நடைபெறாமல் இருக்கிறது. இதற்குக் காரணம் அவர்கள் அம்மா வரும் ஒவ்வொரு மாப்பிள்ளையும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழித்து விடுகிறார்.
இன்னொரு கதாபாத்திரமான ஷாலின் ஜோயாவுக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை. இதனால் இவர் தனது போய் பிரண்டுடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருகிறார்.
றமற்றொரு பெண்ணான கீர்த்தி பாண்டியன் கர்ப்பமாக இருக்கிறார். இதை எப்படியாவது கலைக்க வேண்டும் என்று அவரும் அவர் காதலரும் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.
அடுத்தவர், வித்யா பிரதீப். இவரது குடும்ப வாழ்க்கை சிக்கலில் இருக்கிறது. கணவருடன் பிரச்சினை ஏற்பட்டு கணவர் விவாகரத்துக்குச் செல்கிறார். ஆனால், வித்யா பிரதீப் கணவருடன் சேர்ந்து வாழ நினைக்கிறார்.
இப்படி நான்கு பெண்களும் நான்கு வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நான்கு விதமான பெண்களின் வலி சுமந்த வாழ்க்கையும் ஒரே இடத்தில் இணைகின்றது.அதன் பிறகு அவர்களின் எண்ணங்களும் ஏற்பட்ட மாற்றங்களும் அழகாக காட்டப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநரானாலும் மிகச்சிறப்பாக கதையை நகர்த்தியுள்ளார் யஷ்வந்த். சிறந்த கதை வசனங்களுக்கு எமது பாராட்டுக்கள். பின்னணி இசை அசத்தல்.
படத்தின் நீளம் சற்றே அதிகம் என்பது சிறு குறை என்றாலும் கிளைமாக்ஸ் கைதட்டவைக்கிறது. மொத்தத்தில் சமூக வாழ்வியலோடு கதையை நகர்த்தி, ரசிகர்களை சிந்திக்க வைத்ததில் வெற்றிப்படமாக வந்திருக்கிறது கண்ணகி.
கருத்துகள் இல்லை