தாய் மண்ணே! உறவுகளே! ஒன்று தெரியுமா?
தாய் மண்ணே! உறவுகளே!
ஒன்று தெரியுமா?
என் வெற்றியை
நானே உணர்ந்த தருணம் என்றால்
அடித்துக் கூறுவேன்
அது இதுதான்.
என் மண் பெற்றெடுத்த
என் உறவுகள்
என்னைப் புதிதாய் பூத்த
பூச்செண்டாய்
அரவணைத்து
காரில் ஏத்தி
தேரிலும் ஏத்தி
"மண்ணின் தங்க மகள்"
என்று வர்ணித்துச்
சிம்மாசனம்தனில் - இச்
சிட்டுக்குருவியை
சிறகு விரித்து
இருக்க வைத்து
தெருவைத்
திருவிழாவாக்கி
மகிழ்ச்சியடைந்த உங்கள்
அளவு கடந்த அன்பில் தான்
நான் என் வெற்றியை
உணர்கின்றேன்!
இத்தனை அன்பிற்கு
எத்தகு கைம்மாறு செய்தும்
ஈடாகாது...!
இருந்தும் என்னால்
முடிந்தது...
என் இனத்துக்காகவும்
என் சனத்துக்காகவும்
நானும் என் கலையும்
என்றும் உயிர்ப்புடன் இருக்கும்...!
Kilmisha Yaazhisai
#kilmishayaazhisai #Kilmisha #saregamapalilchamps3 #saregamapalilchamps #vijayprakash #abirami #Abhirami #Mano #srinivas #satheesband #srinivas Srinivas Saindhavi Vijay Prakash Abhirami
கருத்துகள் இல்லை