‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு1
நடிகர் விமல் கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்கும் தேசிங்கு ராஜா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எழிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி வெள்ளி விழா ஆண்டை நிறைவு செய்வதால் இப்படக்குழுவினர் எதுல் 25 எனும் பெயரில் அவரை கௌரவிக்கும் வகையில் விழா ஒன்றை ஒருங்கிணைத்தினர். அந்த விழாவில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
இயக்குநர் எழில் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் தேசிங்குராஜா 2. இதில் விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், ரெடின் கிங்ஸ்லீ, சிங்கம் புலி, புகழ், மொட்டை ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சுவாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர். செல்வா இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். கொமடி என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த படத்தை இன்ஃபினிட்டி கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி. ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் தேசிங்கு ராஜா படத்தின் முதல் பாகத்தைப் போலவே கொமடி ஜேனரில் தயாராகியிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியிருப்பதால் இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனிடையே ‘மனம் கொத்தி பறவை’, ‘தேசிங்கு ராஜா’, ‘வேலைன்னா வந்துட்டா வெள்ளைக்காரன்’ என நகைச்சுவையையும், காதலையும் கலந்து மென்மையான மற்றும் வசீகரமான திரைக்கதையை அமைத்து வெற்றிக் கண்ட இயக்குநர் எழிலின் இயக்கத்தில் தேசிங்கு ராஜா 2 ’ உருவாகியிருப்பதால், இப்படத்திற்கு பார்வையாளர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை