நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம்( தைப்பூசம்) மணவாளக்கோல விழா - 2024


முருகன் அடியார்களே!


நிகமும் சோபகிருது வருஷம் தை மாதம் 11ஆம் நாள் ( 25.01.2024 ) வியாழக்கிழமை பகல் கடம்ப விருக்ஷத்தை தலவிருக்ஷமாகக் கொண்டு மூர்த்தி தலம் முதலான சிறப்புடையதாய் விளங்கும் கலியுகவரதனாம் சுந்தர்பெருமானுக்கு சங்குகளினாலும் , விநாயகர் , பார்வதி , பரமேசுவரன் , சிவகாமசுந்தரி , நடேசப்பெருமான் , தெட்சனாமூர்த்தி , துர்க்கை , ஆறுமுகசுவாமி , லட்சுமி நாராயணர் பெருமான் , வைரவசுவாமி மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெற இருப்பதால் அபிஷேகத்திற்குரிய பொருட்களை உபகரித்தும் தரிசித்தும் தொண்டாற்றுவோமாக .


* பகல் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும் *


மாலை 5.00 மணிக்கு எம்பெருமானுக்கு விசேட பூசை நடைபெற்று , மஞ்சத்தில் ஆரோகணித்து கற்பூர தீபாலங்காரத்தோடு வீதி வலம் வந்து அருட்காட்சி தந்தருளுவர் . முருகன் அருள் பெற்று ஏகுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் .


அடியார்கள் அன்பளிப்புப் பணத்தை காரியாலயத்தில் பொருளாளர் திரு . ச . செல்வக்குமாரனிடம் கையளித்து பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் . 


பரிபாலன சபை , அருள்மிகு நீர்வேலி கந்தசுவாமி தேவஸ்தானம் .

நீர்வேலி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.