கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக 2.3 பில்லியன்!
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று(03)மாலை வருகை தந்த இலங்கைக்கான இந்திய துணை தூதுவர், கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் மாவட்டத்தில் உள்ளவர்களோடு கலந்துரையாடினார்.
இந்திய அரசாங்கத்தால் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக 2.3 பில்லியன் ரூபா மானியமாக வழங்கப்படவுள்ள நிலையில், அந் நிதியில் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கக் கூடிய அபிவிருத்திசார் விடயங்கள் தொடர்பில், கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து வரும் அவர்,இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களைச் சந்தித்து, அவர்களது அபிப்பிராயங்களையும் கேட்டறிந்தார்.
விவசாயம், சுற்றுலா, மீன்பிடி போன்ற முக்கிய 30 துறைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ள நிலையில், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
இக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலும் கவனமெடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை