வாழ்வியலை எடுத்தியம்பும் நூல் வெளியீடு!


 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் விடத்தல் தீவில் பிறந்து வளர்ந்து புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து வரும் திருமதி “ஜனகா ஜெகநாதன் சிவகுரு அவர்கள் தான் பிறந்த மண்ணில் பாசப்பற்றுதலை அப்படியே அலசி ஆராய்ந்து எழுதியதில் விடத்தல் தீவிற்கு உள் நுளைகின்ற வீதிவளைவு கம்பீரமாக வரவேற்று நிற்பதை முதலிலே புகுத்தி விடத்தல்தீவின் ஜோசப்வாஸ் மகாவித்தியாலத்தின் அதிபரும் அதேமண்ணின் மைந்தனுமான கியோமர் பயஸ் அவர்களின் வாழ்த்துறையோடு தனது பிறப்பிட மண்ணை வர்ணித்து எழுத ஆரம்பித்த சிவகுருவின் மகளான ஜனகா அவர்கள் பள்ளமடு குளத்தில் ஆரம்பித்து 54 தலைப்பில் கடைசியாக அமரர் முகமது காசிம் ஆசிரியர் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி எனும் கடைசியாக முடிவுறுத்திய இந்நூல் வெளியீடு ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

முதல் பிரதியினை விடத்தல்தீவு மண்ணின் மைந்தனும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கல நாதன் அவர்கள் பெற்றுக்கொள்ள தொடர்ந்து அனைவரும் நூலினை பெற்றுக்கொள்ள நூல் விமர்சனம் செய்யப்பட்டது.

விமர்சனத்தினை ஊடகவியலாளர் ஜனாப் சுவைப் எம் காசிம் அவர்கள் அதனை அடுத்து சிறப்புறையினை நூலுக்கு அனிந்துரை வழங்கிய விடத்தல்தீவு மண்ணின் மைந்தனும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான அன்ரன் என்றழைக்கப்படும் சிறிஸ்கந்தகுமார். அவர்கள் ஆற்றிய பின்னர் வாழ்துரையினை மன்னார் தமிழ் சங்கத்தலைவர் வி. எஸ். சிவகரன் ஆற்ற நன்றியுரையோடு நிறைவு பெற்ற நிகழ்வை பாடசாலையின் அதிபர் அவர்கள் தலைமையேற்று நடாத்திமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.