விடாமுயற்சி – 50 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்தது!

 


மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தின் அறிவிப்பு கடந்த மே1ம் தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 4ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வந்த நீரவ்ஷா படத்திலிருந்து வெளியேறி ஓம் பிரகாஷ் நியமிக்கபப்பட்டார். இதன் காரணமாக, அஜித்துக்கும், மகிழ் திருமேனிக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

என்றாலும் அவற்றை தள்ளி வைத்துவிட்டு படப்பிடிப்பை துரிதமாக நடத்தி வருகிறார்களாம். அதோடு, அக்டோபர் மாதம் வரை அஜித்குமார் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் மீதமுள்ள காட்சிகளை இன்னும் இரண்டு மாதங…களுக்குள் படமாக்கி முடித்து விட வேண்டும் என்பதால் முன்பை விட தற்போது இன்னும் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளாராம் மகிழ்திருமேனி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.