மேஜர் பிரசாத் அவர்களின் வீரவணக்க 36 வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்…!


தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால அரசியல் நகர்வுகளில் மக்களிடையே தமிழ்த் தேசியத்திற்காக அயராது உழைத்த அந்த போராளி


1988 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் ஐந்தாம் திகதியன்று யாழ்மாவட்டதின் வலிகாமம் மேற்கில் 


சில்லாலை, மாதகல் ஆகிய ஊர்களை வடக்கு எல்லையாகவும்


வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, சில்லாலை என்னும் ஊர்களைக் கிழக்கு எல்லையாகவும்


பண்ணாகத்தைத் தெற்கு எல்லையாகவும்


சுழிபுரத்தையும், பறாளாயையும் மேற்கு எல்லையாகவும் கொண்ட 


பனிப்புலத்தில் இந்திய இராணுவத்தினர் கைதுசெய்ய முற்பட்ட வேளையில் சயனைற் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். 


தமிழீழ மண்ணின் விடியலுக்காய் 


தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானம்மிக்க மாவீரரை 


இன்றைய நாளில் எனது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரும் வேளையில்  


அவரின் வழி நடத்தலில் அவருடன் இந்த சிவனடியான் பழகிய காலத்தை அவரின் வரலாற்று சான்றாக அவரது இதே நினைவு நாளில் பதிவாக்குகின்றேன்.


யாழ்பாணக்கல்லூரியின் சிறந்த மாணவனாய் விளையாட்டு துறையில் விற்பன்னனாய் மூளாய் மண்ணில் முளைத்த முத்து 


ஈழப்போரிலும் தனக்கான தனித்துவத்தை பேணி இனவிடுதலைக்கான தன் பணியை சீராய் செய்து முடித்து தன் மண்ணிற்காய் மரணத்தை 05.02.1988 ல் தழுவிக் கொண்டது 


அந்த வீரவேங்கையிடம் கற்றுக்கொண்ட பலர் இந்த பூமிப் பந்தில் பல திசைகளில் வாழ்ந்தாலும் 


அவரிடம் இந்தச் சிவனடியானும் கற்றுக் கொண்ட அரசியல் பாடங்கள் அதிகம் என்பதால் அவரை அரசியல் கற்பித்த என் குருவாக எண்ணி அவருக்கு என் இந்தப் பதிவை சமர்ப்பணம் ஆக்குகின்றேன் 


விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினராக 1983ம் ஆண்டு ஹிமாசலபிரதேசத்தில் நடந்த விடுதலைப்புலிகளின் இரண்டாவது குழுவில் பயிற்ச்சி எடுத்து வந்து 


வட்டுக்கோட்டை மண்ணில் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE) 

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) தாண்டி விடுதலை புலிகளின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு வித்திட்டவர் 


அராலி வட்டுக்கோட்டை செட்டியார்மடம் சங்கரத்தை சித்தங்கேணி சங்கானை என்றும்  


சுழிபுரம் பண்ணாகம் தொல்புரம் மூளாய் தொடக்கம் 


வடலியடைப்பு பண்டத்தரிப்பு சில்லாலை வரை 


பல போராளிகளையும் பொதுமக்களையும் விடுதலை போருக்காய் நேர்த்தியாக ஒன்று திரட்டிய ஆளுமையானவர்


அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால அரசியல் நகர்வுகளில் மக்களிடையே தமிழ் தேசியத்திற்காக அயராது உழைத்த போராளியாக வாழ்ந்த மேஜர் பிரசாத் ஆவார். 


இந்த சிவனடியான் அவரை சந்திக்க முன்னரே பல மூத்த போராளிகளை காலத்தின் ஓட்டத்தில் சந்தித்திருந்தாலும் 


இன்று நான் நின்று பேசும் அரசியலுக்கு இந்த பிரசாத் அண்ணன் அவர்களின் ஆளுமை யின் தரம்மிக்க தாக்கமே அதிகமாகும்.  


அகிம்சைப் போராளி திலீபனுக்கு பின் யாழ்மாவட்டத்தின் விடுதலை புலிகளின் அரசியல் பொறுப்பாளராகவும் 


இந்திய இராணுவத்துடனான மோதல் தொடங்கி வன்னி நகர்வின் போது வன்னி செல்லாது தனது பிரதேசத்தில் தான் வளர்த்தெடுத்த போராளிகளுக்காக அந்தே மன்ணில் இருந்த பிரசாத் அண்ணா அவர்கள் 


இந்திய இராணுவத் தேடுதலினால் என்னைப் போன்ற பலர் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு சென்றாலும் 


சிலர் கைதாகி பலாலி முகாம் சிறைக்குள் அகப்பட்டு கொண்டாலும் 


இன்னும் சிலர் வன்னி மண் நகர்ந்து போர் கொண்டு நின்றாலும்  


தான் வளர்த்த போராளிகளோடு நின்று சமர் கொண்டு 


சண்டைக் களத்தில் படுகாயமுற்று சயனைட் அருந்தி வீரச்சாவினை தழுவிக்கொண்டார் 


என்றும் போராட்டத்திற்கு முழு நேரமாக வர விரும்பும் எவரையும்


 “பாடசாலை கல்வியை படித்து முடித்து வா” 


என்று அன்பு கட்டளையிட்டு ஒரு தந்தையைப்போல் புத்திகூறும்   


அவரை


“அப்பா” என்று வலிகாமம் மேற்கின் போராளிகள் அழைத்ததில் ஆச்சரியம் இல்லை.  


பிரசாத் அண்ணா


உங்களை போன்ற மாவீரர்கள் என் உணர்வில் இருக்கும் வரை 


இந்த ஆன்மீகவாதியும் அரசியல் பேசுவான் 

என உறுதியுடன் கூறி 


உங்களுக்கு வீரவணக்கத்தை அர்ப்பணம் ஆக்குகின்றேன்.


சுவாமி சங்கரானந்தா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.