பனீர் கிரேவி செய்முறை- Paneer Gravy
பனீர் கிரேவி - Paneer Gravy
தேவையான பொருட்கள்
பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு பற்கள் - 8
இஞ்சி - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 7
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 1
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஸ்டெப் 1
கடாயை சூடாக்கி அதில் உலர்ந்த வெந்தயக்கீரையை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் கைகளால் லேசாக பொடித்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 2
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி முந்திரி சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விடவும். பிறகு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
ஸ்டெப் 3
கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை சேர்ததும் காஷ்மீர் மிளகாய்த்தூள், மிளகாய்தூள், தனியாத்தூள் மற்றும் வறுத்து பொடித்த சீரகப்பொடி எல்லாவற்றையும் சேர்த்து கருகிடாமல் வறுக்கவும். பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
ஸ்டெப் 4
சில நிமிடங்கள் குறைந்த சூட்டில் வதக்கி 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். பின் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து மூடி வைத்து எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க விடவும்.
ஸ்டெப் 5
பின் காய்ச்சி ஆறவைத்த பால், பொடித்து வைத்துள்ள வெந்தயக்கீரை இலைகள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டுகளை கிரேவியில் கலந்து 2 நிமிடங்கள் லேசாக கொதித்ததும் இறக்கவும்.
கருத்துகள் இல்லை