திருமணத்தடை நீங்க விரைவில் திருமணம் நடக்க மந்திர பரிகாரம்!


1.திருமணத்தடை நீங்க ,

விரைவில் திருமணம் நடக்க ,நல்ல குணமுடைய 

மனைவி அமைய ஆண்கள் ஜபிக்க வேண்டிய மந்திரம்:-


ஓம் |பத்னீம் மனோரமாம் தேஹி மனோ விருத்தானுசாரிநீம் |தாரிநீம் துர்கசம்சார சாகரஸ்ய குலோத்பவாம்


மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டு திரியினால் விளக்கேற்றி, இம்மந்திரத்தை குறைந்தது 

108 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.


2 நல்ல குணமுடைய மனைவி அமைய, சீக்கிரம் கல்யாணமாக ஆண்கள் 

ஜபிக்க வேண்டிய மந்திரம்:-


ஓம்|கந்தர்வராஜ விச்வாவஸோ மமாபிலஷிதாம் கன்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா 


மேற்கு நோக்கி அமர்ந்து ,தாமரைத்தண்டு திரியினால் விளக்கேற்றி, இம்மந்திரத்தை குறைந்தது 108 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும்  

ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.


ஹோமம் செய்து ரக்ஷை கட்டினால் விரைவான பலன் கிட்டும்.


3. துர்கா மந்த்ரம் :-


ஓம்|ஞானினாமபி சேதாம்சி தேவி பகவதி ஹிஸா |

பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா பிரயச்சதிஹி ||


ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கித் தினமும் மேற்கு நோக்கி அமர்ந்து ,

தாமரைத்தண்டுத் 

திரியினால் விளக்கேற்றி, இம்மந்திரத்தைக் குறைந்தது 108 எண்ணிக்கையிலும் அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபித்து வர விரைவில் திருமணமாகும்.


4.ஜாதகப்படி தாமதத் திருமண அமைப்புள்ளவர்கள் விரைவில் திருமணம் நிகழ


ஓம் |ஹ்ரீம் ஸ்ரீம் த்ராம் த்ரீம் க்லீம் க்லூம் ஜம் ஜம் |

வனாக்யே காமேச்வரி வனதேவதே ஸ்வாஹா||


5. திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாக


கீழ்க்கண்ட மந்திரங்களில் ஒன்றைத் தினமும் 108 முறை கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.


*ஸ்ரீ கணேஷ மந்திரம் :-*


ஓம் |ஸ்ரீகணேஷம் விக்னேஷம் விவாஹார்த்ததே நமஹா ||


*வேத மந்திரம்:-*


ஓம் யக்ஞோ பவித்ரம் சஹஜம் ரஹத் பிரஜாபதி ஸ்வாஹா ||


6.*அம்மன் குங்கும பரிகாரம்:-*


பேரம் பேசாமல் குங்குமம் வாங்கி செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று அம்மன் ஆலயம் சென்று அந்தக் குங்குமத்தை அம்மன் காலடியில் வைத்து உங்கள் பெயருக்கு விரைவில் திருமணமாக வேண்டும் என்று அர்ச்சனை செய்து அந்தக் குங்குமத்தை அம்மன் பிரசாதமாக வாங்கி வீட்டில் விளக்கு முன் வைத்து கொள்ளவும்.


தினமும் குளித்து முடித்ததும் கிழக்கு முகமாய் நின்று அந்தக் குங்குமத்தை வலது கை மோதிர மற்றும் பெருவிரலால் எடுத்து "ஓம் ஹ்ரீம் சிவப்ரியாயை நம" என்று 


11 தடவை ஜெபித்துக் குங்குமம் இட்டுக் கொள்ளவும். விரைவில் திருமணம் நடக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.