வீதி விபத்தொன்றில் மத குருமார்கள் இருவர் பலத்த காயம்!


 மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தியில் நேற்று(26) மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மத குருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மரண வீடொன்றிக்கு சென்று வீடு திரும்பும் வழியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

வெலிக்கந்தைப் பகுதியில் இருந்து கிரான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியில்  மட்டக்களப்பில் இருந்து வெலிக்கந்தை நோக்கி எதிரே வந்த கனரக வாகனமும் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கிரானைச் சேர்ந்த சிவஸ்ரீ. எஸ். சன்முகம் குருக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த ரேகன் குருக்கள் ஆகியோர்களே  இவ்வாறு விபத்திற்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனம் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.