மாமிச உண்ணி மீன்கள் இலங்கையிலுள்ள குளத்தில் அடையாளங் காணப்பட்டது!📸




கண்டி குளத்தில் சுமார் 9 அடி நீளமும் சுமார் 150 கிலோ எடையும் கொண்ட அலிகேட்டர் கார் எனப்படும் மாமிச உண்ணி மீன்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன் காரணமாக குளத்தை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் பல்லுயிர் பெருக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


மீன்களை மட்டுமின்றி, பறவைகளையும் உண்ணும் இந்த மீன்களை, ஏரியில் இருந்து விரைவில் அகற்றாவிட்டால் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் .



கண்டி குளத்தின் மஹாமாயா பெண் ஆரம்பப் பள்ளி வரை பல இடங்களில் இந்த மீன் காணப்பட்டுள்ளதாக பலர் அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் .

 


முதலை போன்ற முகம் கொண்ட பெரிய மீன் ஒன்று ஏரியில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த மீன் அவதானிக்கப்பட்டுள்ளதாக கண்டி குள பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார் .



கண்டி ஏரியில் உள்ள மீனின் புகைப்படங்களின்படி, இந்த மீன் இனம் 'அலிகேட்டர்' எனவும் ,


  முதலை இனமான 'அலிகேட்டர்' முகத்தை ஒத்த முகத்தை இந்த மீன்கள் கொண்டிருப்பதால் , அந்த மீன் இனத்திற்கு அந்த பெயர் வந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் நிலையான சுற்றாடல் நிலையத்தின் கலாநிதி தெரிவித்துள்ளார் .


தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் தாயகமாக கொண்ட இந்த வகை மீன்கள் செல்ல பிராணிகளாக வீடுகளில் வளர்க்கப்பட்டு , பின்பு அளவில் நன்கு வளர்ந்ததும் அவற்றை ஆறு குளங்களில் போட்டு விடுவதால் எதிர்காலத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .


  'அலிகேட்டர் கார்' வகை மீன்கள் மிக விரைவாக விருத்தி அடையும் தன்மை கொண்டது . அவை கண்டி குளத்தில் இருந்து மகாவலி கங்கைக்குள் செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .


இந்த மீனை பொதுச்சூழலில் பரவ விடுவதன் தீவிரம் தெரியாத யாரோ கண்டி ஏரியினுள் இதனை விட்டிருக்க வேண்டும் எனவும் இதன் பரவல் அதிகரிப்பதற்கு முன்னர் ஏரியில் இருந்து மீன்களை அகற்றிவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(தினமின பத்திரிகை )

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.