அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது.!

 


இந்திய பாஜக அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது. மீனவர்கள் குற்றச்சாட்டு.


இந்தியா பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்ட நிலையில் கச்சதீவு தொடர்பில் பிதட்ட ஆரம்பித்துவிட்டார் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைப்பு செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.


நேற்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்  கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் கச்சதீவு எமது சொத்து இந்தியா இலங்கைக்கு  தாரை பார்த்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.


அண்ணாமலைக்கு தற்போது தேர்தல் காய்ச்சல் ஆரம்பித்த நிலையில் தமிழக மீனவர்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்ளும் கபடத்துடன் தான் பேசுவது  என்ன என்னத்  தெரியாமல் புலம்ப ஆரம்பிக்கப்பட்டார்.


1974க்கு முன்னர் இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கன்னியாகுமரி நாகப்பட்டினம் ஆகிய பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.


இதன் காரணமாக அப்போதைய இந்திய அரசாங்கம் இலங்கை மீனவர்களை கட்டுப்படுத்தும் முகமாக ஒப்பந்தம் என்ற போர்வையில் எம்மை கட்டுப்படுத்துவதற்காக வலிந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.


ஆனால் அண்ணாமலை காங்கிரஸ் அரசாங்கம் கச்சதீவை இலங்கைக்கு தாரை பார்த்து விட்டதாக கூறி வருகிறார் என்றார்.


குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த யார் மாவட்ட கடற் தொழிலாளர் சமாசத்தின் உப தலைவர் பிரான்ஸ்சிஸ் ரட்ணகுமார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு வர முன் பொலிஸ் அதிகாரியாக சொயற்பட்டவர் என ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.


இலங்கை மீனவர்கள் பிரச்சினை திருடன் பொலிஸ் விளையாட்டு என அண்ணாமலை நினைக்கக் கூடாது  இது எமது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை.


ஆகவே கச்சதீவு எமது சொத்து யாரும் உரிமை கோர முடியாது நிலையில்  அண்ணாமலை தேவையற்ற பொய்களை பரப்ப முனைந்தால் கச்சதீவு எல்லையில் அண்ணாமலையின் கொடும்பாவியை கொழுத்தத் தயங்கோம் என அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.