மாமல்லபுரம் இரதக் கோயில்கள்.!

ஐந்து ரதம் அல்லது பஞ்சபாண்ட ரதம் என்று அழைக்கப்படும் இவை ஒற்றைப் பாறையை தேர் போன்ற நுணுக்கத்துடன் செதுக்கி எழுப்பப்பட்ட கோயில் வடிவங்களாகும். கடற்கரைக் கோயிலைப் போன்றே இவையும் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பத் தொகுப்புகள் இந்தியாவில் ஒற்றைக்கல் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகின்றன. இங்கு ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்ட ஐந்து மிகப்பெரிய சிறப்பங்கள் இருக்கின்றன.


பல்லவர் காலத்தில் துறைமுக நகரமாக இருந்த மாமல்லபுரம், திராவிடக் கட்டிடக்கலையைப் பொறுத்தவரை ஒரு முக்கிய இடமாகும். பல்லவர் கட்டிடக்கலைக்கும், ஆரம்ப காலத் திராவிடக் கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கே அமைந்துள்ள ஏராளமான பல்லவர் கட்டிடங்களுள் இரதக் கோயில்கள் எனப்படும் ஒற்றைக் கற்றளிகளும் இடம் பெறுகின்றன. இவை பார்பதற்கு கோயில்கள் போல தோன்றினாலும் உண்மையில் இக்கோயில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் இறந்துவிட்டதால் கட்டுமானப்பணிகள் கைவிடப்பட்டது. ஆயிரம் வருடங்கள் கடந்தும் இன்றும் கட்டிமுடிக்கப்படாமலேயே இந்த பஞ்ச ரத சிற்பங்கள் இருக்கின்றன.


இயற்கையான பாறையைச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில் தேர்போல காட்சி அளிப்பதால் அவை இரதம் எனப்படும். இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல.





















கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.