பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு!

நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நடிகர் பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.  பிகைண்ட்வுட்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை மனோஜ் என்.எஸ். இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு.  அஜு வர்கிஸ்,  அர்ஜூன் அசோகன்,  ரெடின் கிங்ஸ்லி,  மொட்டை ராஜேந்திரன்,  சிங்கம்புலி, லொல்லுசபா சாமிநாதன்,  குக்வித்கோமாளி தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் – பிரபு தேவா இணையும் 6-வது திரைப்படமாகும். முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் – பிரபு தேவா 1994 ஆம் ஆண்டு ‘காதலன்’ திரைப்படத்தின் மூலம் இணைந்தார்கள்.  ஷங்கர் இயக்கிய இந்தப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.  இதைத் தொடர்ந்து லவ் பேர்ட்ஸ்,  மிஸ்டர் ரோமியோ,  மின்சார கனவு ஆகிய திரைப்படங்களும் வெற்றி பெற்றது.  தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.  இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.  இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.