சீஸ் ஆம்லெட் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
முட்டை - 4
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
சீஸ் - 3 க்யூப் (45 கிராம்)
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
🔥வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சீஸை துருவியோ அல்லது நறுக்கியோ வைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
🔥முட்டையுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
🔥தவாவை சூடாக்கி பரவலாக எண்ணெய் தடவி முட்டைக் கலவையை அதில் ஊற்றி, மூடி போட்டு மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும்.
🔥வெந்த பின்பு அதன் ஒரு பாதியில் மட்டும் நறுக்கிய சீஸை பரவலாக தூவி ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.
🔥சீஸ் உருகியதும் மறு பாதியால் மூடவும்.
🔥டேஸ்டி சீஸ் ஆம்லெட் ரெடி. தேவைக்கேற்ப துண்டுகள் போட்டு பரிமாறவும்.😍😍😍😍😍😍
கருத்துகள் இல்லை