தேசம் என்றே கடந்தோமே..!

 


பாதுகாப்பு வலயமென்று

பாதை தேடி நகர்ந்தோமே!

பாதகரின் ஆப்பு என்று

பாதம் வைக்க உணர்ந்தோமே! 


பாதி வாழ்வை தக்கவைக்க

பாரங்களைச் சுமந்தோமே!

பாரத்தோடு பகலிரவாய்

பாவிகளாய் அலைந்தோமே! 


சோறு சுகம் குறைந்தபோதும்

சோர்வு இனறி நடந்தோமே!

சேறுதண்ணியில் புதைந்தபோதும்

தேசம் என்றே கடந்தோமே! 


வேறுபடை வந்தபோதும்

வேங்கையாக நிமிர்ந்தோமே!

ஆறமனம் அமைதியின்றி

அடிக்கடி இடம்பெயர்ந்தோமே! 


காலம் பதில் சொல்லுமென்று

கனவோடு வாழ்கிறோமே!

காயங்களைச் சுமந்துகொண்டே

காலங்களைக்  கடக்கிறோமே!


-பிறேமா(எழில்)- 


'

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.