நெய் புலவு செய்வது எப்படி?தேவையானவை:


  பாசுமதி அரிசி - 2 கப், 


பெரிய வெங்காயம் - 3, 


பச்சை மிளகாய் - 4, 


உப்பு - தேவையான அளவு,


 புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி.


தாளிக்க:  


நெய் - 4 டேபிள்ஸ்பூன், 


பிரிஞ்சி இலை - 1.


அரைக்க: 


பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2 (தனியாக அரைக்க வேண்டும்), இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல் (தனியாக அரைக்க வேண்டும்).


செய்முறை:


✌ பாசுமதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பெரிய வெங்காயம், புதினா, மல்லித்தழையை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், நெய்யைக் காயவைத்து, பிரிஞ்சி இலை சேர்த்து, அரைத்த பட்டை-லவங்க விழுது மற்றும் இஞ்சி-பூண்டு விழுதுகளை சேர்த்துக் கிளறுங்கள். வதங்கியதும் வெங்காயம், சிட்டிகை உப்பு, புதினா, மல்லித்தழை சேர்த்து வதக்குங்கள். 


✌பிறகு, வடித்த சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். இந்த ‘நெய் புலவு’க்கு தொட்டுக்கொள்ள தயிர்பச்சடியை விட, குருமா மிகவும் நன்றாக இருக்கும்.😍😍😍😍

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.