பூண்டு மிளகாய்த் துவையல் செய்வது எப்படி?


தேவையான பொருள்கள்


சிவப்பு மிளகாய் - 20


பூண்டு - 10 பற்கள்


கல் உப்பு - முக்கால் மேசைக்கரண்டி


நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


கடுகு, உளுத்தம் பருப்பு - ஒன்றரைத் தேக்கரண்டி


கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை


🌀தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். பூண்டுப் பற்களை தோலுரித்து வைக்கவும்.


🌀அடுப்பில் வாணலியை வைத்து அரை மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.அதே வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, சூடானதும் சிவப்பு மிளகாய்களைப் போட்டு கருகிவிடாமல் வறுத்தெடுத்து ஆறவிடவும்.


🌀ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.


🌀பிறகு அத்துடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டுப் பற்களையும் சேர்த்து, தேவையான அளவிற்கு தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.


🌀அரைத்த துவையலை தாளித்த கடுகு உளுத்தம் பருப்புடன் சேர்த்து, மிக்ஸியைக் கழுவிய தண்ணீரையும் ஊற்றி, கரைத்துக் கொள்ளவும். சுவையான, காரசாரமான பூண்டு மிளகாய்த் துவையல் தயார். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.


🌀ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் 4 அல்லது 5 நாட்கள் வரைக்கும் கூட உபயோகப்படுத்தலாம். பூண்டு வாசனையுடன் நன்றாக இருக்கும்.


🌀அரைத்த அதே தினத்தில், நல்ல காரமாக இருக்கும். அரைத்த மறுநாளிலிருந்து உப்புச் சுவை அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.