அவல் புட்டு செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
அவல் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய் - 2
தேங்காய் துருவல் - ஒரு கப்
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
🌀கடாயில் நெய் விட்டு அவலை போட்டு வறுத்து எடுக்கவும்.
🌀வறுத்த அவலை மிக்ஸியில் போட்டு சன்ன ரவையாக பொடிக்கவும். அவலில் சிட்டிகை உப்பு கலந்து பால் தெளித்து பிசறி 5 நிமிடம் மூடி வைக்கவும்.
🌀பின்னர் புட்டு குழலில் தேங்காய் துருவல், அவல் புட்டு மாவு என மாற்றி மாற்றி வைக்கவும்.
🌀மாவு, தேங்காய் துருவல் வைத்த குழலை குக்கரின் வைத்து வேக விடவும்.
வெந்ததும் உதிர்த்து சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான அவல் புட்டு ரெடி.
கருத்துகள் இல்லை