வடக்கில் இப்படியான நிகழ்வுகளும் நடக்கிறது!!!📸


வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் திருமதி கமலாம்பிகை சொக்கலிங்கம் அவர்களுக்கு பெற்றோர்கள் வழங்கிய கௌரவம்.

ஒரு ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்பதையும் தாண்டி மாணவர்களை வழிநடாத்தும் நல் ஆசானாய் சிறந்த முதல்வராய் முன்மாதிரியாய் இருந்து இன்றுடன் விடைபெறும் நற்சிந்தனையாளர் திருமதி கமலா சொக்கலிங்கம் அம்மணிக்கு நல்வாழ்த்தினையும் அவரது ஓய்வுக்காலத்திலும் மிகச்சிறந்த கல்விப்பணியை ஆற்ற இறையருள் வேண்டி மனதார வாழ்த்துகிறோம்.

புதுக்குளம் கனிஷ்ட பாடசாலைச்சமுகம் அம்மணியை பல்லக்கில் தூக்கி கௌரவித்தனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.