நெல்லிக்காய் சட்னி செய்வது எப்படி?



தேவையான பொருள்கள்


பெரிய நெல்லிக்காய் - 4


மிளகாய் வற்றல் - 5


உளுந்து - 6 தேக்கரண்டி


எண்ணெய் - 2 தேக்கரண்டி


புளி - சிறிது


உப்பு - தேவையான அளவு


தேங்காய் - சிறிது


கறிவேப்பிலை - சிறிது [விரும்பினால்]


செய்முறை


🎑நெல்லிக்காயை விதை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.


🎑மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.இட்லி பாத்திரத்தில் விதை நீக்கின நெல்லிக்காயை வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


🎑வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, மிளகாய் வற்றல், விரும்பினால் சிறிது கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுக்கவும்


🎑மிக்ஸியில் வறுத்தவற்றை போட்டு சிறிது தேங்காய், புளி, உப்பு, நெல்லிக்காய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியான சட்னியாக அரைத்து எடுக்கவும்.


🎑சுவையான நெல்லிக்காய் சட்னி தயார். இதை இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.


🎑விரும்பினால் தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் துவையலாகவும் சாப்பிடலாம்.😘😘😘😘😘

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.