ஸ்டஃப்ட் இட்லி செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
காலிப்ளவர் - துருவியது
உருளைக்கிழங்கு - சிறியது (துருவியது)
இஞ்சி - பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது )
கொத்துமல்லி தழை
சீரகம், மிளகாய் தூள்
கரம் மசாலா
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் காலிப்ளவர், உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு மிளகாய் பொடி, கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லி தழை போட்டு கலக்கி இறக்கி ஆற வைக்கவும்.
இட்லி ஊத்தும் பாத்திர தட்டில் ஒரு லேயராக இட்லி மாவு ஊத்தி, அதன் மேல் படத்தில் உள்ளது போல் கலவையை போடவும்.
மீண்டும் அதன் மேல் மாவு ஊத்தி அடுப்பில் வைத்து எடுக்கவும்.
இட்லி பிடிக்காதவங்க கூட, உள்ளே இருக்கும் லேயர்காக சாப்பிடுவாங்க.

.jpeg
)





கருத்துகள் இல்லை