திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு பாராட்டுவிழா!


திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்று வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் பெற்று செல்லும் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களுக்கான பிரியாவிடை  மற்றும் சேவை நலன் பாராட்டு விழா   திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மேலதிக அரசாங்க அதிபரின் சேவையை பாராட்டி அவருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். நினைவுச் சின்னங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் (வவுனியா, மன்னார்) விவசாய அபிவிருத்தி உதவி ஆணையாளராகவும், தொழில் திணைக்களத்தில் (கொழும்பு, திருகோணமலை) உதவி தொழில் ஆணையாளராகவும், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராகவும் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கடமையாற்றியுள்ளார்.

மேலும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபராக பதில் கடமை புரிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.