இ.தொ.காவின் கோரிக்கைக்கு உதவுவேன்: ரவிசங்கர் குருஜி!


வாழும் கலை அறக்கட்டளை நிருவக செயற்பாடுகளை மலையகத்தில், ஆரம்பிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த வேண்டுகோளுக்கு உதவ உள்ளதாக,  ஆன்மீக குரு அமைதித் தலைவரும் வாழும் கலை பயிற்சி அறக்கட்டளை நிலையத்தின் ஸ்தாபகருமான  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு  கூறினார். இங்கு கருத்து தெரிவித்த அவர்:

வாழும் கலை அறக்கட்டளை அமைப்பின் செயற்பாட்டை மலையகத்திலும் பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும்.

பயிற்சி  நிலையங்களை ஆரம்பிக்க இடங்கள் உள்ளிட்ட வசதிகளை எதிர் பார்க்கிறோம்.

இதற்கான உதவிகள்   எமது அறக்கட்டளை நிறுவகம் ஊடாக வழங்கப்படும்.

ஆன்மீக கற்கை நெறி பாடசாலைகள் ஆரம்பித்தல், வாழும் கலை  பயிற்சிகள், பெண்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்புகள், உள்ளிட்ட பல்வேறு  உதவிகளையும் தமது அறக்கட்டளை நிறுவனம் வழங்கும் என்றும் குருஜி தெரிவித்தார். நுவலியா சீதாஎலிய ஆலய மஹாகும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியாவிலிருந்து  குருஜி வந்திருந்தார்.

இச்சந்திப்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பி.இராஜதுறை,பாரத் அருள்சாமி உள்ளிட்ட இ.தொ.கா உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.