சவூதி மன்னருக்கு நுரையீரல் அழற்சி!


சவூதி அரேபிய மன்னர் சல்மான் நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டு ஜித்தாவில் உள்ள அல் சலாம் மாளிகையில் சிகிச்சை பெறுவதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அழற்சி குறையும் வரை 88 வயதான மன்னருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னரின் உடல் நிலை காரணமாக முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான், நேற்று இடம்பெறவிருந்த தனது ஜப்பான் விஜயத்தையும் ஒத்திவைத்திருப்பதாக ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யொஷிமாசா ஹயாஷி தெரிவித்துள்ளார்.

மன்னர் சல்மான் அதிக காய்ச்சல் மற்றும் மூட்டு வலி காரணமாக அல் சலாம் மாளிகையில் உள்ள அரச குடும்ப மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இரண்டரை ஆண்டுகள் முடிக்குரிய இளவரசராக இருந்த மன்னர் சல்மான் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதியின் ஆட்சியாளராக முடிசூடிக்கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.