திருநெல்வேலியில் சோற்றுபார்சலில் மட்டைத்தேள். உணவகம் சீல் வைப்பு.!!


திருநெல்வேலி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் நீதி மன்ற உத்தரவில்  சீல் வைக்கப்பட்டது .


இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம், திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இனால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எவையும்  பின்பற்றாமல் சுகாதார சீர் கேட்டுடன் உணவகம் இயங்கிவருவது அவதானிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை (27.05.2024) கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளரிற்கு 45,000/= தண்டம் அறவிட்டதுடன் கடையினை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார். 


இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகம் இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டது...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.