யாழில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல்!

 


யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவம் அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் நேற்று (03-05-2024) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடுகள் மீது பெற்றோல் குண்டுகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.