ஆகாயக் கடல் வெளிச்சமர் நினைவு!!
"ஒருநாட்டினுள் இரு இராணுவம்" என இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் முதன்முதலில் குறிப்பிடப்பட்டு எழுதிய சமர் இதுதான்.
வெற்றிலைக்கேணி வழியாக துருப்புக்காவிக் கப்பல்களின் உதவியுடன் இராணுவம் தரையிறங்க, 602 போராளிகளின் இழப்புடன் சமர் கைவிடப்பட்டது. (விழுப்புண்ணடைந்து பண்டுவம் செய்யப்பட்டும் பின்னர் 56 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
பொதுமக்களிடத்தில் முட்டைமா செய்து தரும்படி வேண்டி, ஏராளமான பொதுமக்களால் உலர் உணவு செய்து வழங்கப்பட்ட சமரும் இதுதான்.
மேஜர் கேசரி , லெப்.கேணல் சரா ஆகியோர் இரும்புத்தகடுகளால் வடிவமைக்கப்பட்ட கவசவண்டிகளில் நுழைந்து வீரச்சாவடைந்தனர்.
அன்று வீழாதிருந்த ஆனையிறவைப் பத்து வருடங்களில் வீழ்த்தியது தமிழர் சேனை.
கருத்துகள் இல்லை