பெண் நட்பும் ஆண்களும்….!!
பெண் நட்பையும் காமத்தையும் பல ஆண் நண்பர்களுக்கு பிரித்து பார்க்கவே தெரிவதில்லை.
பெண் நட்புகள், சிநேகமாக மனசுக்கு படும் ஒரு ஆணுடன் அன்பாக பேசினாலோ, ஏன் சிரித்து பேசினால் கூட அது தன்னுடனான காதல்.. அந்தக் காதலும் காமத்துக்காகவே என்று கற்பனை செய்கிறார்கள்.
ஒரு தோழியுடன் பேசும் போதெல்லாம் இவள் படிவாளா என்று மனதுக்குள் கணக்கு போட்டு கொண்டே தான் அடுத்த மூவ் வைக்கிறார்கள்.
அப்படியே பெண் படிந்தாலும் சிநேகிதி என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அலுத்தவுடன் கழட்டி விட்டு அடுத்த நொடி யே அவளுக்கு பட்டம் தான். படிய மறுத்தாலும் அதே பட்டம் தான்.
தனக்கு எத்தனை வயதானாலும் மகள் பேத்தி கொள்ளு பேத்தி வயது பெண்களையும் வெளிப்படையாகவே லஜ்ஜை இல்லாமல் மோகிப்பார்கள்.
நட்பும் காமமும் ஒன்றே என்று பல ஆண்கள் நினைத்து கொள்வதால் தான் ஒரு ஆணுடன் மட்டும் ஃபேஸ்புக் லோ, வாட்சப் பிலோ தனிமையில் பேச பல பெண்கள் தயங்குகின்றனர்.
ஆனால் தூய்மையான ஆண் நட்பே என்றும் பெண்கள் தேடுதல்.
கருத்துகள் இல்லை