மாபியா தமிழர்களின் நீதித் தர்மம் எப்படிப் பட்டது?
வைத்திய மாபியாக்களின் கொடூரத்திற்கும் வைத்தியசாலைகளில் நடக்கும் அநீதிகளுக்கும் தனி ஒருவனாக நீ எப்படி குரல் கொடுத்து சமாளிப்பாய் Dr அர்ச்சுனா?
சிந்தித்து செயல்பட்டாயா?
மன்னாரில் 22 சட்டத்தரணிகள் மன்னார் நீதிமன்றில் உனக்கு எதிராக ஆஜராகி பிணை கொடுக்கக் கூடாது என்றார்களே..... இப்பொழுது புரிகிறதா எங்கள் தமிழர்களின் நீதித் தர்மம் எப்படிப் பட்டது என்று?
மன்னாரில் ஒரு குறிப்பிட்ட மதம் ஆட்சி செய்கின்றதா என்ற சந்தேகம் இப்பொழுது வருகின்றது. ஒரு அரசியல்வாதி உட்பட. அந்த அரசியல்வாதி நேற்று மன்னார் வைத்தியசாலைக்குச் சென்று அங்கே இருக்கும் டாக்டர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தி குதூகளித்து வந்த காட்சிகளை பார்த்தோம்.
இறந்துவிட்ட அந்த இளம் தாய்க்காக நீதி கேட்க நீ போனாயே, இப்பொழுது அந்த மன்னார் மக்கள் எங்கே போனார்கள்?
கருத்துகள் இல்லை