பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் மாகாண சபை தேர்தல் பிற்போகலாம்..!

 


பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் மாகாண சபை தேர்தல் பிற்போகலாம்.. யாழில் மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு.


நாட்டில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் மாகாண சபை தேர்தல் பிற்போகலாம் என முன்னாள் தேர்தல் ஆணையாளரும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 


யாழ் மாவட்ட செயலகத்தில் ( வியூ) நிறுவனம் ஏற்பாடு செய்த தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்துவது மட்டும் நோக்கமாக இருக்கக் கூடாது. 


மக்களின் ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமை பாதுகாக்கப்படுவதோடு நடைபெறும் தேர்தல் நீதியானதும் நம்பகத்தன்மை உடையதுமான தேர்தலாக அமைய வேண்டும்.


இலங்கையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 2025 ஆம் ஆண்டு மூன்று தேர்தல்கள் நடாத்தியே ஆக வேண்டும். 


உச்சநீதிமன்றத்தில் உள்ளூராட்சி தேர்தல் நிறுத்தப்பட்டமை தொடர்பில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவாக நடத்துமாறு உச்ச நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளமை யாவரும் அறிந்த விடயம்.


தற்போது உள்ள சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 21 ஆம் திகதி மக்கள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக மக்கள் வாக்களிக்க உள்ளனர்.


ஜனாதிபதி தேர்தலுக்கு எல்லை நிர்ணயம் தேவையில்லை ஆனால் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமானால் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 


இவ்வாறாண நிலையில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் பாராளுமன்றத்தை கலைத்து விட்டால் மாகாண சபை தேர்தலை நடாத்த முடியாமல் போய்விடும். 


ஏனெனில் மாகாண சபை தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் கலைக்கப்பட்டால் தள்ளிப் போகும்.


ஆகவே மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து உரிய காலப் பகுதியில் தேர்தல்களை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.